தொழில்முறை இணைய மொழிபெயர்ப்புச் சேவைகள்
TranslationServices.com எந்தத் தலைப்பிலும், எந்த மொழியிலும் தொழில்முறை மொழிபெயர்ப்பை வழங்குகிறது. எங்களுடைய வல்லுனர் குழுவினர் சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ஆயிரக்கணக்கான ஆவணங்களை மொழிபெயர்த்து அவர்களுடைய தேவைகளை நிறைவுசெய்துள்ளார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், சீன மொழி என எந்த மொழியிலிருந்து உங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்பட்டாலும் சரி, எந்த மொழிக்கு மொழிபெயர்க்கவேண்டியிருந்தாலும் சரி, நாங்கள் உங்களுடைய ஆவணங்களை மிக உயர்ந்த தரத்தில் மொழிபெயர்த்துத் தருவோம் என உறுதியளிக்கிறோம்.
கட்டணத் தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் வழங்கும் சேவைகள் என்னென்ன?
TranslationServices.com, வணிக நிறுவனங்களில் தொடங்கி, ஆசிரியர்கள், கல்வியாளர்கள்வரை பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது. தமிழில் மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குவதோடு, எங்களுடைய திறம்வாய்ந்த மொழிபெயர்ப்புக் குழு 100க்கும் மேற்பட்ட மொழிகளை மொழிபெயர்க்கிறது. நாங்கள் வழங்குபவை:
-
கல்வியியல் மொழிபெயர்ப்பு . நாங்கள் எந்தவொரு தலைப்பையும் தமிழிலிருந்து ஆங்கிலம், தமிழிலிருந்து ஜெர்மன், தமிழிலிருந்து ஜப்பானிய மொழி, மற்றும் பல மொழி இணைகளில் நியாயமான கட்டணத்துக்கு மொழிபெயர்க்கிறோம்.
-
வணிக மொழிபெயர்ப்பு. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு அல்லது வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட விலைப்பட்டியல் உங்களுக்குத் தேவையா? நாங்கள் மனிதவளக் கையேடுகள், தயாரிப்பு விளக்கங்கள் மற்றும் பிற வணிக மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளடக்கங்களுக்கான வணிக மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறோம்.
-
இலக்கிய மொழிபெயர்ப்பு. உங்கள் பன்னாட்டு வாசகர் எண்ணிக்கையை வளர்க்கத் தயாரா? நாங்கள் காதல் நாவல்கள்முதல் அறிவியல் புனைகதைப் பிரதிகள், நினைவுக் குறிப்புகள்வரை கிட்டத்தட்ட எல்லா வகைப் புத்தகங்களையும் மொழிபெயர்த்துள்ளோம். எங்கள் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதைத் தாண்டி, உங்கள் குரலையும் நடையையும் தக்கவைக்குமாறு சிறப்பாக மொழிபெயர்க்கிறார்கள்.
-
மருத்துவ மொழிபெயர்ப்பு. நாங்கள் மருத்துவ மொழிபெயர்ப்பை நேரடியாக வழங்கவில்லை, ஆனால் ஒரு மருத்துவ மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம் அவர்கள் எல்லாக் குறிப்புகள், மருத்துவ அறிக்கைகள், நோயாளி நேர்காணல்கள் மற்றும் பிற மருத்துவ ஆவணங்களைத் தமிழுக்கும் தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும் விரைவாகவும் துல்லியமாகவும் மொழிபெயர்க்கிறார்கள்.
-
சட்ட மொழிபெயர்ப்பு. நாங்கள் உங்கள் நோக்கக் கடிதங்கள், உறுதிமொழிப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் பிற சட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட ஒரு சட்ட மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்கள் சட்ட மொழிபெயர்ப்பு கூட்டு நிறுவனம் எப்போதும் தொழில்முறையாகச் செயல்படும், உங்கள் தனியுரிமையைக் காக்கும்.
-
சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு. உங்கள் கல்விச் சான்றிதழ்கள், திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்கள், அல்லது பிற முக்கிய ஆவணங்களைக் குடிவரவு அல்லது பிற காரணங்களுக்காகத் தமிழிலிருந்து மொழிபெயர்க்க வேண்டியிருந்தால், இந்தச் சேவையைத் தேர்ந்தெடுங்கள்.
-
உள்ளூராக்கல். உங்கள் வணிகத்தை ஒரு வெளிநாட்டுச் சந்தையில் விரிவுபடுத்த விரும்புகிறீர்களா? நாங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப உங்கள் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கிறோம்.
-
துணைத்தலைப்பிடல். நாங்கள் உங்கள் வீடியோக்களில் உள்ள தமிழ் உரையாடலை மொழிபெயர்க்கிறோம், மற்றும் இத்தாலியம், போர்த்துகீசியம் அல்லது வியட்நாமியம் போன்ற மற்றொரு மொழியில் துணைத்தலைப்புகளை உருவாக்குகிறோம்.
-
பொது மொழிபெயர்ப்பு. உங்கள் தமிழ்மொழி ஆவணத்தை உடனே மொழிபெயர்க்க வேண்டுமா? நாங்கள் எல்லாவற்றையும் துல்லியமாகவும் நியாயமான கட்டணத்திலும் மொழிபெயர்க்கிறோம், எனவே உங்கள் தமிழ் மொழிபெயர்ப்புத் தேவைகளைப்பற்றி உரையாட எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் யார்?
TranslationServices.comல் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் நிரூபிக்கப்பட்ட அனுபவம் மற்றும் தகவல்களில் தனித்துவமான கவனம் செலுத்தும் உயர் திறமை வாய்ந்த வல்லுனர்கள் ஆவர். எங்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பல தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அதாவது நாங்கள் ஒவ்வொரு திட்டத்தையும் பொருத்தமான குழு உறுப்பினருக்கு வழங்குகிறோம். சுருக்கமாகச் சொல்வதென்றால், சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் பிற பகுதிகளுக்கு நாங்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குகிறோம்.
நீங்கள் ஏன் TranslationServices.com உடன் பணியாற்ற வேண்டும்?
-
நாங்கள் எந்தவொரு தலைப்பு அல்லது வகையிலும் நியாயமான கட்டணத்தில் துல்லியமான வணிக, கல்வியியல் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்புகளை வழங்குகிறோம்.
-
நாங்கள் எந்த மொழியிலும், எந்தவொரு தலைப்பிலும், தொழில்முறை மனித மொழிபெயர்ப்பை வழங்குகிறோம்.
-
பிற மொழிபெயர்ப்புச் சேவைகளைப் போலன்றி, நாங்கள் இயந்திர மொழிபெயர்ப்பை நம்புவதில்லை; அதற்குப் பதிலாக ஒவ்வொரு மொழிபெயர்ப்புத் திட்டத்தையும் எங்கள் தொழில்முறைக் குழுவின் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கிறோம்.
நாங்கள் எங்கள் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் அடையக்கூடிய உயர் தரங்களைப்பற்றிப் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எங்கள் பணியில் உங்கள் மனநிறைவுக்கு உறுதி அளிக்கிறோம்.